தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகளுக்கு இடையே நிர்வாகிகள் மாறுவது அதிகரித்து வருகிறது. கோவையில் அதிமுகவின் சமூக வலைதளப் பிரிவில் (IT Wing) மிக முக்கியமான பொறுப்பில் இருந்தவர் தொழிலதிபர் KPR. சதீஷ். இவர் திடீரென அதிமுகவில் இருந்து விலகி, நேற்று (ஜனவரி 5) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்து வரவேற்றார்.
கோவை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பலமாக இருந்த ஒருவர், தேர்தல் நேரத்தில் விலகி விஜய்யுடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் கொள்கைகள் பிடித்துப் போய் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோவையில் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் வலிமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
