தமிழகத்தில் திமுக-விற்கு எதிரான வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒன்றிணைக்குமாறு தமிழக பாஜக-வினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.
கடந்த வாரம் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, மதச்சார்பின்மை அடிப்படையில் தவெக-வும் காங்கிரஸும் கூட்டாளிகள் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது பாஜக தனது அடுத்தகட்ட காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
