கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணம் செய்தார். அப்போது அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த 28 வயது வாலிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சாமர்த்தியமாகச் செயல்பட்டு வாலிபரின் அத்துமீறலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.

தன்னைத் துன்புறுத்திய அந்த வாலிபர் பேருந்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவரைப் பிடித்து அந்தப் பெண் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தார். தான் தாக்கிய அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து அங்கோலா போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.