சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளியில், ஒரு கடைக்குள் அத்துமீறி நுழையும் இருவர், அங்கிருக்கும் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதோடு, அவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. உழைத்து வாழும் ஒரு சாதாரண மனிதர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

​குறிப்பாக, தெருவோர வியாபாரிகள் மற்றும் பேருந்து நிலையக் கடைக்காரர்கள் போன்ற அன்றாடம் உழைக்கும் மக்கள் மீது ஏவப்படும் இத்தகைய அராஜகங்கள், ஆளும் அரசுக்கு எதிரான மிகப்பெரிய கோபத்தை மக்களிடையே விதைத்துள்ளது. “மாமூல் கொடு, இல்லையென்றால் அடி வாங்கு” என்பதுதான் தற்போதைய மாடலா என மக்கள் கேள்வி எழுப்புவதோடு, வரும் 2026 தேர்தலில் இதற்கான தகுந்த பாடத்தைப் புகட்டுவோம் என்றும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.