2026 புத்தாண்டை வரவேற்க பெங்களூரு நகரம் மின்னொளியில் ஜொலித்து வரும் நிலையில், கொண்டாட்டத்தின் போது போதை அதிகமாகி சாலையோரம் தள்ளாடுபவர்கள் மற்றும் நடக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு உதவ பெங்களூரு காவல்துறை முன்வந்துள்ளது.

“அளவுக்கதிகமாகப் போதை ஏறி, தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களை போலீஸாரே அவர்களின் வீடுகளில் கொண்டு போய் விடுவார்கள் (Drop)” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து மேலும் விளக்கம் அளித்த அமைச்சர், “இது அனைவருக்கும் பொருந்தாது; தன்னிலை மறந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும்.

இதற்காக நகரின் முக்கிய 15 இடங்களில் தற்காலிக ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. போதையில் இருப்பவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு, போதை தெளிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.