விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் புகழ். இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது தந்தை காலமானதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது தந்தை எப்படி இறந்தார் என்ற விவரம் வெளிவராத நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் மற்றும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

