தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவருக்கு திருமணம் ஆக இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போதும் படங்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அடுத்த வருடம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதே நேரத்தில் தமிழில் மண்ணாங்கட்டி, ஹாய், தெலுங்கில் சீரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் 2 படங்கள், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
Introducing Nayanthara as GANGA in – A Toxic Fairy Tale For Grown-Ups #TOXIC #TOXICTheMovie
@advani_kiara @humasqureshi #GeetuMohandas @RaviBasrur #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva #PrashantDileepHardikar #KunalSharma #SandeepSharma #JJPerry… pic.twitter.com/FSiWGo7XeC
— Yash (@TheNameIsYash) December 31, 2025
இந்த நிலையில் கன்னடத்தில் கே ஜி எஃப் புகழ் யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்தில் தற்போது நடிகை நயன்தாரா கங்கா என்ற வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை நயன்தாரா மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 19ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் கியாரா அத்வானி, ஹீமாகுரோசி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கும் நிலையில் கீது மோகன் தாஸ் மற்றும் யஷ் ஆகியோர் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ள நிலையில் கீதுமோகன் தாஸ் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த படம் பான் இந்தியா மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
