பெங்களூரு பனசங்கரி 3-வது கட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பஷீர் என்பவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் அமர்ந்திருந்த பஷீரை வழிமறித்த அந்த கும்பல், இரும்புத் தடிகளாலும் அரிவாள்களாலும் காரின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.

இந்நிலையில் பின்னர் அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுத்து முகத்திலும் உடலிலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த பயங்கரமான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உள்நாட்டுப் பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பஷீர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பெங்களூரு காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்ட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரத் தாக்குதல் பெங்களூரு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.