தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்திராயங்குட்டா பகுதியில் திருமண விழா ஒன்றில் விருந்தினர்களைப் போல வேடமணிந்து வந்த இரு பெண்கள், அங்கிருந்தவர்களின் கைப்பைகள் மற்றும் விலை உயர்ந்த செல்பேசிகளைத் திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Two women wearing burqas stole several purses of other women from a marriage hall in Bandlaguda area in Hyderabad and left.
Even CCTV would have failed if the two women hadn’t removed their Niqabs.
Is it time for India to ban Niqab in public areas just like many European &… pic.twitter.com/RXVBziNOc1
— Incognito (@Incognito_qfs) December 27, 2025
மன்னத் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பர்தா அணிந்து வந்த அந்தப் பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அடுத்தடுத்து பைகளைத் திருடியுள்ளனர். இது குறித்து பண்ட்லாகுடா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று ஹைதராபாத்தின் பிவிஎன்ஆர் விரைவுச் சாலையில் அதிவேகமாகச் சென்ற காரின் ஜன்னல் வழியாக நபர் ஒருவர் பட்டாசுகளை வெடித்துச் சிதறச் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபரைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
