சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய யூடியூபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் அந்தப் பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு மிக நெருக்கமாக வந்து முத்தமிட முயன்ற அந்த நபரை, அந்த யூடியூபர் தைரியமாகத் தடுத்து நிறுத்தினார். “என்னை முத்தமிட நினைக்கிறீர்களா? அனுமதி இல்லாமல் இப்படிச் செய்வது தவறானது” என்று அவர் நேரடியாகவே அந்த நபரை கண்டிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதேபோல, போலந்தில் வசிக்கும் இந்தியப் பெண் யூடியூபர் ஒருவர், லிஃப்ட் ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் தனி நபர்களின் சுதந்திரம் மற்றும் பொது இடங்களில் நிலவ வேண்டிய பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

“>

 

சமூக வலைதளங்களில் இதைப் பார்க்கும் நெட்டிசன்கள், மற்றவர்களின் அனுமதியின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், குறிப்பாகப் பயணிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.