தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு இந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த சாதனைகளில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? எனச் சொல்ல முடியுமா?” என்று நேரடியாக ‘ஓபன் சேலஞ்ச்’ விடுத்தார். தங்களது அரசு வெறும் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில்லை என்றும், சிலரைப் போல வாயால் வடை சுடும் அரசு இதுவல்ல என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார். அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த முதல்வர், திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பட்டியலிட்டார்.

​தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சி இனி எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கும் என்றும், மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் எவ்வித தொய்வும் இருக்காது என்றும் அவர் உறுதி அளித்தார். முதல்வரின் இந்த நேரடி சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.