சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக மக்கள் பல வழிகளைக் கையாளும் இன்றைய காலக்கட்டத்தில், உண்மையான திறமை தானாகவே அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. அந்த வகையில், தற்போது ஒரு காய்கறி வியாபாரி காய்கறிகளை விற்கும் வினோதமான முறை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த நபர் ராமாயணத்தில் வரும் ராவணன் கதாபாத்திரத்தின் கம்பீரமான குரலில் கத்தி காய்கறிகளை விற்கிறார். “பெண்ணே வெளியே வா, காய்கறிகள் தீர்ந்துவிட்டன!” என்று அவர் ராவணன் பாணியில் கணீர் என்று குரல் கொடுப்பதைக் கேட்டு மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவருடைய மார்க்கெட்டிங் திறமையை “டாப் லெவல்” என்று பாராட்டி வருகின்றனர். “காய்கறி வாங்க வரும் பெண்களை இவர் கடத்திச் சென்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது” என சிலர் நகைச்சுவையாகக் கூறி வருகின்றனர்.

“>

 

ராவணனின் அச்சு அசல் குரலில் பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த வியாபாரியின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.