சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் இருக்கும் பல மாணவர்களை அந்த ஆசிரியர் வரிசையாகச் சத்தமாக அறைந்தும், அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தள்ளியும், நிற்க வைத்தும் தண்டிக்கிறார். சுமார் 4 நிமிடங்கள் நீடிக்கும் இந்தக் காணொளி, அந்த ஆசிரியர் மாணவர்களை எந்த அளவிற்குத் துன்புறுத்துகிறார் என்பதைத் தத்ரூபமாகக் காட்டுகிறது.

வீடியோவை காண

​பொதுவாக சீனப் பள்ளிகளில் இத்தகைய உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது சாதாரணமான ஒன்று என்று சொல்லப்பட்டாலும், அங்குள்ள கடுமையான சட்டங்களால் இது போன்ற காட்சிகள் வெளியில் தெரிவதில்லை. ஆனால், தற்போது ஒரு மாணவர் துணிச்சலாகத் தனது கைப்பேசியில் இதைப் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளதால், இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இந்தக் காணொளி ஏற்படுத்தியுள்ளது.