தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக முக்கிய கட்சிகள் தங்களை அணுகி அழைப்பு விடுப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், குறிப்பிட்ட சிலர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்திக் காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது தொண்டர்களின் கடின உழைப்பால் சுமார் 200 தொகுதிகளில் அ.ம.மு.க.வின் உட்கட்டமைப்பு மிகவும் பலமாக இருப்பதாக அவர் கூறினார். கடந்த முறை எங்களால் சட்டமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை, ஆனால் இந்த முறை அ.ம.மு.க. வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.