தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் விவகாரம் இன்னும் தணியாத நிலையில், தற்போது மதுரையிலும் அக்கட்சிக்குப் புதிய சிக்கல் வெடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயன்பனுக்கு எதிராக அந்த மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கு விஜயன்பன் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக நிர்வாகிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

​ஏற்கனவே தூத்துக்குடி விவகாரத்தில் அஜிதா என்ற நிர்வாகி விஜய்யின் காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளானது. இப்போது மதுரையிலும் மாவட்டச் செயலாளர் மீதே இத்தகைய பணப் புகார் எழுந்துள்ளதால், தலைவர் விஜய் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து மாவட்ட அளவில் எழுந்து வரும் இத்தகைய புகார்கள், கட்சித் தலைமைக்கு மிகப் பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளன.