அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன், சென்னையில் இன்று (டிசம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசியல் களம் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், அதிமுக கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் மிக விரைவில் ஒரு “மகிழ்ச்சியான செய்தி” வெளியாகும் என்று கூறினார்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றிப் பேசுகையில், “இந்தியாவையே பாஜக ஆட்சி செய்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக ஆட்சி அமைப்பார்” என்று மிகவும் அதிரடியாகவும் உறுதியாகவும் தெரிவித்தார்.