ஜார்க்கண்ட் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் விளக்கு வெளிச்சத்தில், சிறுவன் அலெக்ஸ் முண்டா தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 33 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை நெகிழ்வித்தது. தந்தை இல்லாத நிலையில், பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் தாய் நூதன் டோப்போ, தன் வீட்டில் மின்வசதி இல்லாததால் மகனைப் பணியிடத்திற்கே அழைத்து வந்து படிக்க வைத்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த ராஞ்சி மாவட்ட ஆட்சியர் மஞ்சுநாத் பஜந்திரி, உடனடியாக அந்தத் தாயையும் மகனையும் நேரில் அழைத்து அவர்களின் நிலையை கேட்டறிந்தார். சிறுவனின் கல்விக்கு உதவும் வகையில், அவனுக்கு மாதம் 4,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கவும், தற்போது படிக்கும் பள்ளியில் கட்டணத்தை ரத்து செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
यह रांची का एक छोटा-सा आदिवासी बच्चा एलेक्स मुंडा है, जो हर रात पेट्रोल पंप की रोशनी में बैठकर पढ़ाई करता है। इसकी मां नूतन टोप्पो दिन में पेट्रोल पंप पर मजदूरी करती हैं और रात में उसी पेट्रोल पंप की रोशनी में अपने बेटे को पढ़ाती हैं। कुछ साल पहले एलेक्स के पिता का निधन हो गया… pic.twitter.com/Dc9pbpZCvf
— Hansraj Meena (@HansrajMeena) December 23, 2025
“>
மேலும், அடுத்த ஆண்டு முதல் அவன் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து இலவசமாகப் பயிலவும், அந்தத் தாய்க்கு அரசு சார்பில் வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏழைத் தாயின் வைராக்கியமும், சமூக வலைதளத்தின் வலிமையும் இணைந்து அந்தச் சிறுவனின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றியுள்ளது.
