இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்கும் அதிக செலவுக்கும் பெயர்பெற்றவை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர் தனது சகோதரியின் திருமணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார். தனது வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை மட்டும் அழைக்காமல், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள யாசகம் பெறுபவர்களையும் வீடற்றவர்களையும் ‘சிறப்பு விருந்தினர்களாக’ அழைத்து அசத்தியுள்ளார்.

அவர்களை வாகனங்களில் அழைத்து வந்து, மற்ற விருந்தினர்களோடு சமமாக அமர வைத்து, அறுசுவை உணவளித்து கௌரவித்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட ஏழை எளிய மக்கள், தங்களுக்குக் கிடைத்த இந்த முதல் மரியாதையையும் அங்கீகாரத்தையும் எண்ணி நெகிழ்ந்து போயினர்.

“>

 

“உண்மையான ஆசீர்வாதம் இவர்களிடம் இருந்துதான் கிடைக்கும்” என்று சித்தார்த் ராய் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “நிஜமான மனிதாபிமானம் இதுதான்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். வெறும் ஆடம்பரத்திற்காகப் பணம் செலவழிக்கும் காலக்கட்டத்தில், ஆதரவற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளித்த இந்தத் திருமணம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.