உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது. கூட்டம் கூட்டமாக வயல்களுக்குள் புகுந்த குரங்குகள், பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தன.
बंदरों से फसलों को बचाने के लिए किसानों ने निकाला अनोखा तरीका
बिजनौर के कई इलाकों में बंदरों के आतंक से फसलों को बचाने के लिए किसानों ने एक अनोखा तरीका निकाला. किसानों ने पैसे जमा कर भालू की एक ड्रेस बनवाई और पहनकर खेतों में घूमना शुरू कर दिया जिससे बंदर भागते नजर आए.#Bijnor pic.twitter.com/N1V691wz6F
— NDTV India (@ndtvindia) December 12, 2025
இந்நிலையில், இந்தச் சிக்கலுக்கு அப்பகுதி விவசாயிகள் ஒரு புதுமையான மற்றும் பயனுள்ள தீர்வை கண்டுபிடித்துள்ளனர். விவசாயிகள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி, அந்தப் பணத்தில் ஒரு பெரிய கரடி வேடத்தை உருவாக்கியுள்ளனர். இப்போது, விவசாயிகள் ஒவ்வொருவராக இந்தக் கரடி வேடத்தை அணிந்துகொண்டு தங்கள் வயல்வெளிகளைச் சுற்றி வருகின்றனர்.
இந்தக் கரடி வேடத்தைக் கண்டதும், பயத்தின் காரணமாகக் குரங்குகள் உடனே வயலை விட்டு ஓடி விடுகின்றன. இந்த தனித்துவமான முயற்சி, குரங்குத் தொல்லையில் இருந்து விவசாயிகளுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. “நாங்கள் கரடி வேடத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, குரங்குகள் எங்கள் வயல்களுக்கு அருகில் கூட வருவதில்லை. எங்கள் பயிர்கள் இப்போது பாதுகாப்பாக உள்ளன” என்று அப்பகுதி விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
