சமூக ஊடகங்களில் தற்போது ஒரு மனதை உருக்கும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. மனைவி கோபித்துக்கொண்டதால், கணவர் சமையலறையில் சமைக்கத் தொடங்கிய நிலையில், அவருக்கு உதவியாக ஒரு குட்டிப் பெண் உடன் இருந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. @littlesunshineaayra என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மனைவி கோபம் கொண்டதால், கணவர் அடுப்பில் காய்கறி சமைத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அவரது நான்கு வயது மகள் தரையில் உட்கார்ந்து, தன் சின்னஞ்சிறிய கைகளால் ரொட்டி மாவை உருட்டி, அப்பாவிற்குக் கைகொடுக்கிறார். இந்தச் சின்னஞ்சிறிய குழந்தை ரொட்டி செய்வதில் காட்டிய தீவிரத்தையும், பாசத்தையும் பார்த்து நெட்டிசன்கள் வியந்துள்ளனர். தந்தை மற்றும் மகளின் இந்த வீடியோ பலரின் இதயத்தைத் தொட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு இதுவரை 87.5K லைக்குகள் மற்றும் பல கமெண்ட்கள் கிடைத்துள்ளன.

 

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “அம்மா இல்லாத நேரத்தில் இந்தக் குட்டிப் பெண் எவ்வளவு அழகாக ரொட்டி செய்கிறார்” என்றும், “இவர் என் மகனுக்கு வேண்டும்” என்றும், “இந்த வீடியோ மிகவும் க்யூட்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.