சமூக வலைதளங்களில் ஒரு சாலை விபத்துக் காணொளி வேகமாகப் பரவி, அதைப் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ருமேனியாவில் நடந்த இந்த விபத்து, திரைப்பட சண்டைக் காட்சியைப் போல் நம்ப முடியாத அளவுக்குப் பயங்கரமாக இருந்தது. அதிவேகத்தில் சென்ற ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்ததால், அது சில மீட்டர் உயரத்துக்கு காற்றில் தூக்கி வீசப்பட்டு, தரையில் பலத்த சத்தத்துடன் விழுந்தது.
यह वीडियो बेहद भयावह है
वीडियो रोमानिया का है। pic.twitter.com/mu2bOqvFtH
— Priya singh (@priyarajputlive) December 5, 2025
இந்தக் கொடூரமான விபத்தைக் கண்டவர்கள், இது ஒரு நிஜமான, வேதனையான காட்சி என்று தெரிவித்தனர். அதிக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் காணொளியில், ஒரு சாலையின் ஓரத்தில் பேருந்தும் மற்ற வாகனங்களும் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென எதிரே இருந்து ஒரு கார் அதிவேகத்தில் காற்றில் பறந்து வருவது பதிவாகியுள்ளது.
காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், விபத்தின் தாக்கம் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருந்தது. இந்தச் சம்பவம் அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவு ஆகியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தக் காணொளி பரவி வருவதால், பலரும் இதைப் பார்த்து பதறிப்போய் உள்ளனர். “இதைப் போன்றதொரு கோர விபத்தை இதற்கு முன் பார்த்ததில்லை” என்றும், அதிவேகமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் வாகனங்களை ஓட்டுவதற்கு இது ஒரு பயங்கரமான பாடம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
