உலகம் முழுவதும் இறுதிச் சடங்குகள் செய்யும் முறை பலவிதமாக மாறுபடுகிறது. சில மதங்களில் இறந்தவர்களின் உடலுக்குத் தீ மூட்டி முகாக்கினி கொடுக்கப்படுகிறது, வேறு சில மதங்களில் சடலங்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றன. பல நாடுகளில் மின்சார தகன மேடைகளில் சடலங்கள் எரிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது. ஆனால், சில நாடுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் விதம், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளது.

குறிப்பாக, சீனாவில் உள்ள தொலைதூர கிராமங்களில் காணப்படும் ஒரு பாரம்பரிய அடக்கம் செய்யும் முறையின் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்த விசித்திரமான நடைமுறையைப் பார்ப்பவர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் அதிர்ச்சியடைகின்றனர். இந்த வைரல் காணொளியில், அடக்கம் செய்யப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தெளிவாகத் தெரியும் வகையில், சுற்றிலும் ஒளி ஊடுருவக்கூடிய கல்லறைகள் காணப்படுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Joel James – Comedian – Cooking (@joeljamescomedy)

இந்தக் கல்லறைகளில் சில இடங்களில் இரண்டு உடல்கள் கூட ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, கணவன் – மனைவி ஒன்றாக இறந்தால், இருவரையும் அருகருகே அடக்கம் செய்வது வழக்கமாக உள்ளது. இது சீனாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தின் பழமையான பாரம்பரியப் பண்பாட்டு முறை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கத்தின்படி, இறந்தவர்களை இந்த விதத்தில் அடக்கம் செய்வது அவர்களுக்கு அளிக்கும் ஒரு பெரிய மரியாதையாகக் கருதப்படுகிறது.

மேலும், ஆசியாவின் பல நாடுகளில் மக்கள் இறந்தவர்களின் சடலங்களை ஒரு குறிப்பிட்ட அறையில் வைத்து, அவ்வப்போது அவர்களுக்குப் பூஜைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளது. இந்தக் காணொளியைக் கண்ட பலரும் அதிர்ச்சியுடனும், ஒரு சிலர் இந்த பாரம்பரியம் ‘மிகவும் நன்றாக உள்ளது’ என்றும் கூறி கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.