காட்டிலுள்ள மிகவும் ஆபத்தான இரண்டு வேட்டைக்காரர்களான ஜாகுவார் (Jaguar) மற்றும் அனகொண்டா (Anaconda) ஆகியவற்றுக்கு இடையேயானச் சண்டையில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பது எப்போதும் ஒரு சுவாரஸ்யமான கேள்விதான்.

இந்த நிலையில், இந்த இரண்டுமே மோதிக் கொள்ளும் ஒரு சண்டைக் காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, யார் உண்மையான ‘கொடிய வேட்டைக்காரன்’ என்பதை உறுதி செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by WILDLIFE, JAGUARS & BIRDS 🐆🐍🦅 (@jaguars_pantanaltours)

சுமார் 25 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில், புதர்களுக்குள் ஒளிந்திருந்த அனகொண்டாவை, ஜாகுவார் தனது வாயால் கெட்டியாகப் பிடித்து வெளியே இழுக்கிறது. அனகொண்டாவும் சளைக்காமல், தனது இரையைக் இறுக்கிச் சுற்றிக் கொள்ளும் குணத்தை வெளிப்படுத்தி, ஜாகுவாரின் வாயைச் சுற்றிக் இறுக்க முயல்கிறது.

ஆனால், அனகொண்டா இறுக்குவதற்குள் சுதாரித்துக் கொண்ட ஜாகுவார், அதனைத் தன் வாயில் இருந்து உதறி, கவ்வியபடியே அங்கிருந்து விரைந்து ஓடி மறைகிறது. இதன் மூலம், இந்தச் சண்டையில் ஜாகுவாரே வெற்றி பெற்று, அனகொண்டாவை வேட்டையாடியது தெளிவாகிறது.