ஒரு திருமண விருந்தில் (Wedding Feast) சுவையான உணவு கிடைக்கிறது என்றால், உங்கள் பாதையில் சேறு நிறைந்த ஆறு குறுக்கே ஓடினாலும் என்ன செய்வீர்கள்? பெரும்பாலானோர் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள்.
ஆனால், அந்தச் சூழ்நிலை எப்படி இருந்தாலும், ‘இலவச விருந்து’ கிடைத்தால் அதைச் சாப்பிட்டே தீருவேன் என்று வைராக்கியத்துடன், ஆழமானச் சேற்றுக்குள் (Deep Mud) நின்று விருந்தைச் சுவைத்த மக்களின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளைக் குதூகலப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
தொடர்ந்துப் பெய்த மழையால், திருமணப் பந்தலும் மைதானமும் 4 முதல் 5 அங்குல ஆழத்திற்குச் சேறு நிறைந்துக் காணப்பட்டுள்ளது. ஆனால், இலவச உணவின் மீதான ஆசையால், மக்கள் தங்கள் காலணிகள் மற்றும் உடைகள் சேறாவதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், கையில் தட்டுகளுடன் சேற்றில் நின்று உணவைச் சுவைக்கின்றனர்.
“நிலைமை எப்படி இருந்தாலும், விருந்துண்ணாமல் போகமாட்டேன்” என்று அவர்கள் தீர்மானித்தது போல் இந்த வீடியோவில் தெரிகிறது. “இந்தச் சேற்றிற்குள் நுழைந்துச் சாப்பிடுவதற்கு ஒரு ‘தைரியம் ‘ வேண்டும்” என்றும், “இவர்களுக்கு எனது சால்யூட்” என்றும் பல இணையவாசிகள் கிண்டலும் பாராட்டுமாக கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
