சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ் பெறுவதற்காக, பள்ளிச் சீருடை அணிந்த ஒரு மாணவி, பரபரப்பானச் சாலையின் நடுவே நின்று ‘ரீல்ஸ்’ (Reels) செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி, மக்களின் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. அந்த மாணவியின் பொறுப்பற்றச் செயலால், நீண்ட போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) ஏற்பட்டிருக்கிறது.
மாணவியின் இந்தச் செயலால், அவ்வழியாக வந்த கார், பைக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் திடீரென பிரேக் போட்டு, விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் போக்குவரத்து முழுவதும் நின்று, சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தன.
ट्राफिक लाइट की जगह इन जैसी को ही लेटाय…see more pic.twitter.com/O6rDoGmdVl
— Arun Yadav Kosli (@ArunKoslii) November 13, 2025
ரில்ஸ் மோகத்திற்காகப் பொதுச் சாலையில் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்டுகளைச் செய்வது, தங்கள் உயிருக்கும், மற்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து விதிகளையும் மீறுவதாகும் என்று இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இதுபோன்ற தவறானப் போக்கை ஊக்குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
