சாலையோரம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு ஏற்பட்ட திகிலூட்டும் விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டின்போது கார் ஒன்றின் அடியில் உருண்டு சென்றப் பந்தை எடுக்க, அந்தச் சிறுவன் எதிர்பாராத விதமாக அந்தக் காரின் அடியிலேயே தவழ்ந்து சென்றான்.

சிறுவன் கார் அடியில் சென்ற சில வினாடிகளிலேயே, சிக்னலுக்காக நின்றிருந்த அந்தக் கார், திடீரென முன்னோக்கி நகரத் தொடங்கியது. சக்கரம் சிறுவனின் கால்கள் மீது ஏறியதுபோல் தெரிந்தது.

உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்தினார். இதனைப் பார்த்த ஒரு பெண் (சிறுவனின் தாயாக இருக்கலாம்) உடனடியாக ஓடி வந்து, காரை பின்புறம் எடுக்குமாறு (Reverse) ஓட்டுநரிடம் பதற்றத்துடன் கேட்டுள்ளார்.

ஆனால், ஓட்டுநர் குழப்பத்தில் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தயங்குவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. அந்தச் சிறுவனின் கால்களில் மட்டுமே சக்கரம் ஏறியிருக்கலாம் என்பதால், அவன் காயங்களுடன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சிறுவனின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.