சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் வெளியான ஒரு காணொளி, குறிப்பாகப் பிரியாணி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகுந்த அதிருப்தியையும் முகம் சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலான அந்தக் காணொளியில், ஒரு நபர் பெரிய வட்டிலில் பிரியாணியை விற்பனை செய்துகொண்டிருக்கிறார். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அவர் தனது இரண்டு கால்களையும் அந்தப் பிரியாணிக்குள் வைத்திருக்கிறார்.

​இந்தக் காணொளியைப் பார்க்கும் அனைவருக்கும், அந்த உணவின் மீது ஒருவித வெறுப்பும் அருவருப்பும் தான் வரும். இதுபோன்ற சுகாதாரமற்ற செயல் உணவு விற்பனையில் ஈடுபடும்போது ஏற்படுவது வேதனைக்குரியது. இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் தங்கள் வெறுப்புகளைக் கடுமையான விமர்சனங்களாகவும், இனிமேல் பிரியாணி சாப்பிட மாட்டோம் என்றும் கருத்துகளாகப் பதிவு செய்து வருகின்றனர்.