சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி தற்போது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஓநாய் – நாய்  இனச்சேர்க்கை நடைபெறும் ஒரு அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.

இந்த காணொளியை இந்திய வனவிலங்கு நிறுவகத்தில் பேராசிரியராக உள்ள பிலால் ஹபீப் தனது ‘எக்ஸ்’பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நாட்டில் இத்தகைய சம்பவம் மிகவும் அபூர்வம் என்பதையும், இது காட்டோநாய் இனங்களின் எதிர்காலத்துக்கு ஒரு பெரும் எச்சரிக்கை சின்னம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:  “காட்டு ஓநாய் மற்றும் வீட்டுவாச நாய் இணைவது, ஓநாய்களின் மரபணு தூய்மை, இயல்பான நடத்தை மற்றும் நீண்டகால வாழ்நிலை ஆகியவற்றிற்கு பேராபத்தாக உள்ளது. கலப்பினமாக்கல், ஓநாய் இனத்தையே ஆபத்துக்கு உள்ளாக்கும் முன்னோட்டம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், வனத்துறையினர் மற்றும் மரபணு நிபுணர்கள் சம்பவத்தை கவனித்து வருகிறார்கள்.