சிங்கப்பூரில் ஒரு பெண் தனது வீட்டு வாசலில் வழங்கப்பட்ட உணவு விநியோகத்தைக் (Food Delivery) கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஊழியர் உணவுப் பொட்டலத்திலிருந்து கொட்டிய கஞ்சியை (Porridge) மீண்டும் பாத்திரத்திற்குள் ஊற்றி வழங்கியதைக் கண்டு அவர் சமூக வலைதளங்களில் தனது அதிர்ச்சியையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விரும்பத்தகாத சம்பவம், உணவுப் பாதுகாப்பு (Food Safety) மற்றும் டெலிவரி ஊழியர்களின் பொறுப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

அந்தப் பெண் லிஃப்ட் பகுதியில் தன்னுடைய உணவை டெலிவரி ஊழியர் கையாண்டதை அண்டை வீட்டார் ஒருவர் வீடியோவும், புகைப்படமும் எடுத்துள்ளதால் இந்த விபரீதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by MS News (@mustsharenews)

டெலிவரி ஊழியர் உணவை வழங்கக் காலதாமதம் ஆனதாகவும், உணவுப் பொட்டலத்தைப் பார்த்தபோது அது ஒழுகி, பிசுபிசுப்பாக இருந்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

உணவு கொட்டியதால் அளவு குறைந்திருக்கும் என நினைத்த அவர், உணவை ஒரு கிண்ணத்திற்குக் மாற்றிவிட்டு, குறைவான அளவு இருப்பதை டெலிவரி நிறுவனமான GrabFood-க்கு புகார் அளித்துள்ளார்.

அதன்பிறகு வெளியில் சென்றவர், திரும்பியபோது அண்டை வீட்டார் எழுதியிருந்த எச்சரிக்கைச் சீட்டைப் பார்த்த பின்னரே, தரையில் கொட்டிய கஞ்சியை ஊழியர் மீண்டும் பாத்திரத்தில் கொட்டியுள்ளார் என்பதை அறிந்து, மிகுந்த அருவருப்படைந்ததாகத் தெரிவித்துள்ளார்.