மலேசியாவின் சுங்கை பெட்டானி (Sungai Petani) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் ஆசிரியை ஒருவர், தனது குளியலறைச் சீலிங்கில் (Ceiling) சுமார் 60 கிலோ எடை கொண்ட ராட்சச மலைப்பாம்பு (Reticulated Python) ஒன்று மறைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

புதன்கிழமை மாலை 4 மணியளவில், பள்ளி முடிந்து வந்த அவரது 15 வயது மகள், குளியலறையின் சீலிங் இடிந்து விழுந்திருப்பதைக் கண்டு பயந்துள்ளார். ஆசிரியை வீட்டுக்கு வந்து உடைந்த சீலிங் பகுதியைச் சோதித்தபோது, அங்கே பட்டுத் துணி போல ஏதோ ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kuching Explorer (@kuching_explorer)

மகளின் ஃபோன் கேமராவில் ‘ஜூம்’ செய்து பார்த்தபோதுதான், அது ராட்சச மலைப் பாம்பின் உடல் என்று தெரிய வந்தது. தகவலறிந்து மலேசிய சிவில் தற்காப்புப் படையினர் (APM) வந்து பாம்பை வெளியே இழுத்தபோது, அதன் பிரம்மாண்டமான உருவத்தைக் கண்டு ஆசிரியை ‘அனகோண்டா’ என்று அலறியுள்ளார்.

பாம்பு அருகில் இருந்த சதுப்பு நிலப் பகுதியிலிருந்து சப்பாத்தி மரத்தின் வழியாக வீட்டிற்குள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அவரும் அவரது குழந்தைகளும் அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.