பஸ் பயணத்தை முடித்தவுடன் பயணச்சீட்டுகளை (Bus Ticket) உடனடியாகத் தூக்கி எறிந்துவிடுவது பெரும்பாலானோரின் வழக்கம். ஆனால், பயணச்சீட்டைச் சிறிது காலத்திற்குப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஏன் அவசியம் என்று ஒரு பயணி ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு, இணையப் பயனர்களுக்கு வாழ்க்கைக்கான ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
இந்தப் பதிவைப் பகிர்ந்த அந்தப் பயணியின் முக்கியமான பொருட்கள் பஸ்ஸில் தொலைந்து போனபோது, டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்த ஹெல்ப்லைன் (Helpline) எண்ணின் உதவியால் அவர் பெரிய இழப்பைத் தவிர்த்துள்ளார்.
டிக்கெட்டில் இருந்த எண்ணைத் தொடர்புகொண்டு, அதன் வழியாகக் கண்டக்டரைச் (Conductor) சம்பந்தப்பட்ட நபர் தொடர்புகொண்டதால், ஒரு மணி நேரத்திற்குள் அவரது பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், பஸ் டிக்கெட்டை அடுத்த சில நாட்களுக்காவதுப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தப் பதிவுக்குப் பிறகு, பலரும் தாங்கள் அனுபவித்த இதேபோன்றச் சம்பவங்களைப் பகிர்ந்து, பஸ் டிக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
