உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தன்னுடன் பழகி வந்த 60 வயது ஜோஷினா என்ற பெண், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், 45 வயது இம்ரான் என்ற நபர் அவரைக் கொலை செய்துள்ளார்.
இம்ரானுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதால், அவர் ஜோஷினாவைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால், நவம்பர் 13 அன்று ஜோஷினாவை ஊருக்குத் திரும்ப அழைத்துச் செல்வதாகக் கூறி இம்ரான் புறப்பட்டார்.
வழியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், இம்ரான் ஜோஷினாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகப் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். 1,000-க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இம்ரானைக் கைது செய்தனர்.
