உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் மோகன்லால் கஞ்ச் பகுதியில் காதல் வாக்குவாதம் கொடூரமாக முடிந்துள்ளது. காதலியை திருமணம் செய்ய அழுத்தம் தந்த இளைஞர், அவர் மறுத்ததை அடுத்து கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு வசிக்கும் அலோக் என்ற இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பிரியான்ஷ் என்ற இளம்பெண்ணுக்கும் சில மாதங்களாக காதல் தொடர்பு இருந்தது. கடந்த சில நாட்களாக இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தன.

இந்த நிலையில், நேற்று  அலோக், பிரியான்ஷியின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால், பிரியான்ஷ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் தீவிரமான நிலையில் கத்தியால் அலோக், பிரியான்ஷை தாக்கியதாக போலீஸ் தகவல். கடுமையாக காயமடைந்த பிரியான்ஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அலோக் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, பிரியான்ஷியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பிச் சென்ற அலோக்கை கைது செய்ய தீவிரமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.