சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கில், நடிகர் ஜெயராம் சாட்சியாக வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை கோவிலின் சொத்துகளான புனித ஆபரணங்களில் இருந்து தங்கம் முறைகேடாக அகற்றப்பட்டமை கடந்த வாரங்களில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை பலர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஜெயராமிடம் இருந்து சில முக்கிய தகவல்களைப் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை சாட்சியாக அழைக்க புலனாய்வு குழு திட்டமிட்டிருப்பதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குக்கான அடுத்த கட்ட விசாரணையில் ஜெயராமிடம் அதிகாரப்பூர்வ வாக்குமூலம் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.