மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னர் பேருந்து நிலையத்தில் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தும் மேடை மீது ஏறியதில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 வயதுச் சிறுவன் உட்பட ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், நான்கு பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் ஆதர்ஷ் போரடே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பண்டர்பூர் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் தனது குடும்பத்துடன் கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும் வழியில், சின்னர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பயணிகளுக்காகக் காத்திருக்கும் மேடையை நோக்கிப் பாய்ந்து, அங்கு நின்றிருந்தவர்களை நசுக்கியது.
नासिक के सिन्नर में ‘लालपरी’ के ब्रेक हुए फेल; अनियंत्रित बस प्लेटफॉर्म पर चढ़ गई। हादसे में एक बच्चे की मौत हो गई। #nashikpolice #Nashik #NashikSinnarMSRTCBusAccident #STBus #MaharashtraNews pic.twitter.com/lFyT7X0IhB
— Akash Masne (@AkashMasne5995) November 20, 2025
இந்த விபத்து நடந்த முழு காட்சியும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்குக் காரணம் பிரேக் ஃபெயிலியர் என்று கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு, சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் நிலவியது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் உடனடியாகக் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பதைக் கண்டறிய, காவல் துறையினர் தொழில்நுட்ப ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவச் சிகிச்சை முடிந்து அனுமதி கிடைத்தவுடன் பேருந்தின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
