பொதுவாகப் பழங்கள், இலைகள் போன்றவற்றைச் சாப்பிடும் குரங்குகள் முட்டைகளைச் சாப்பிடுமா? என்ற கேள்விக்கு ஒரு நகைச்சுவையான பதிலைத் தரும் வகையில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. விலங்குக் காட்சி சாலை அல்லது சுற்றுலாத் தலம் ஒன்றில் சிலர் அமர்ந்திருக்க, அங்கு வந்த ஒரு குரங்கிடம் குசும்புடன் ஒருவர் போலி முட்டை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

 

அந்த முட்டை உண்மையானது போலத் தோற்றம் அளித்ததால், ஆர்வத்துடன் அதை வாங்கிய குரங்கு, அதை உற்றுப்பார்த்துவிட்டு சில நொடிகளிலேயே கீழே வைத்து உடைக்கிறது. முட்டை உடைந்தவுடன் உள்ளே இருந்து கருப்பு நிறப் பொருள் வெளியேற, அதிலிருந்து வந்த கடுமையான துர்நாற்றம் குரங்கின் மூக்கைத் தாக்கியுள்ளது. அருவருப்பான அந்த துர்நாற்றம் அதன் மூக்கைத் தாக்கிய மறுநொடியே, குரங்கின் முகம் திரிந்துபோய் வாந்தி எடுப்பதைப் போலப் பாவனை செய்து, கடுமையான முகச் சுளிப்புடன் அங்கிருந்து விலகித் தரையில் அமர்ந்து கொள்கிறது.

இதை எதிர்பார்த்து முட்டையைக் கொடுத்திருந்த சுற்றுலாப் பயணிகள், குரங்கின் இந்த வேடிக்கையான எதிர்வினையைக் கண்டு சத்தமாகச் சிரித்து மகிழ்கின்றனர். சில வினாடிகளே ஓடும் இந்த வீடியோவில், குரங்கின் முகபாவனைகள் ஒரு திரைப்படக் காட்சி போல மாறி மாறி வருவதைக் காண முடிகிறது. முதலில் ஆர்வத்துடன் முட்டையை உடைக்கும்போது இருந்த உற்சாகம், பின் குழப்பம், இறுதியில் அருவருப்பு எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக இந்தக் காட்சி அமைந்து, பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கிறது.