உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் திருட முயன்ற ஒரு இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரான்பூர் நகரில் நடைபெற்ற ராம்லீலா கண்காட்சியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, அந்த இளைஞர் கைப்பேசி மற்றும் ஒரு கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருட முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.
पीलीभीत: युवक को बंधक बनाकर पीटा गया
➡ सिलेंडर चोरी के आरोप में युवक को पीटा
➡ लकड़ी की बल्ली से हाथ, पैर रस्सी से बांधा
➡ युवक को बंधक बनाने का वीडियो वायरल
➡ मौके पर पहुंची पुलिस ने युवक को मुक्त कराया
➡ बंधक बनाने वालों पर पुलिस ने दर्ज किया केस
➡ पूरनपुर कोतवाली इलाके… pic.twitter.com/cXoKMXrAou— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) November 4, 2025
அந்த இளைஞர் கடையின் பின்வாசல் வழியாக நுழைந்து பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, கையும் களவுமாகச் சிக்கியுள்ளார். அவர் பிடிபட்ட சில நிமிடங்களில், அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு, திருடனைப் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். திங்கட்கிழமை அன்று நடந்த இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்னர் அந்த நபர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே, காவல் நிலையப் பொறுப்பாளர் அருண் குமார் அளித்த புகாரின் பேரில், திருடனைத் தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
