குஜராத்திலிருந்து வந்த சில சுற்றுலாப்பயணிகள், அபுரோடு பகுதியில் உள்ள ஹாலிடே ஹோட்டலில் தங்கி, சாப்பிட்டு, ஓய்வெடுத்தனர். அவர்கள் 10,900 ரூபாய் பில் செய்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஆடம்பர காரில் தப்பிக்க முயன்றனர். ஹோட்டல் நிர்வாகிகள் பலமுறை கேட்டும் அவர்கள் பில் கட்டவில்லை.
This woman ate food worth ₹10,900 in a hotel with her friends on Ambaji Road, Gujarat.
Then she ran away without paying the bill in a luxury car.
With police help, the restaurant manager caught them, and she finally paid the bill.
pic.twitter.com/9HZ7bIEhfr— ︎ ︎venom (@venom1s) October 27, 2025
ஹோட்டல் உரிமையாளர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைவாக வந்து, அம்பாஜி ரோடு அருகே அந்த சுற்றுலாப்பயணிகளை பிடித்தனர். அவர்கள் பணம் இல்லை என்று சாக்கு சொன்னாலும், போலீசார் முன்னிலையில் ஆன்லைனில் பில் தொகையை செலுத்தி விட்டனர். இதனால் ஹோட்டலுக்கு பெரிய நஷ்டம் தவிர்க்கப்பட்டது.
