உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள அம்பர் தலாப் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5ஆம் வகுப்பு மாணவர் சமத் என்பவர், பள்ளி முடிந்த பிறகு தனது வகுப்பறையிலேயே மணிக்கணக்கில் பூட்டப்பட்டிருந்தார். மற்ற மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்தாமலேயே பள்ளி ஊழியர்கள், ஆசிரியர் வகுப்பறையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதியம் பள்ளி முடிந்தபோது, சமத் வகுப்பறையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்கள் கழித்து அவர் எழுந்தபோது, உள்ளே பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அழவும், கத்தவும் தொடங்கிய சம்பவம் அனைவரையும் திகைக்க வைத்தது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அருகில் மக்கள் கூடினர். உள்ளே பார்த்தபோது, அப்பாவி குழந்தை அழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் முன்னிலையில், பூட்டு உடைக்கப்பட்டு, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. அதன் பிறகு சம்பவம் குறித்துச் சமத்தின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
रुड़की के राजकीय प्राथमिक विद्यालय नंबर 12 में सोमवार को छुट्टी के बाद कक्षा 5 के छात्र समद पढ़ाई के दौरान सो गया। अध्यापकों ने बिना कक्षा की जाँच किए कमरा ताला लगाकर चले गए।
कुछ घंटे बाद बच्चे की आँख खुली तो वह खुद को बंद पाया और जोर-जोर से रोने लगा। उसकी चीखें सुनकर आसपास के… pic.twitter.com/uBbfEpNlco
— bhUpi Panwar (@askbhupi) October 27, 2025
“>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குடும்பத்தினரும் கோபத்தில் உள்ளனர். பள்ளி ஊழியர்களின் தரப்பில் இத்தகைய அலட்சியம் எப்படி ஏற்பட்டது என்றும், பள்ளி நேரத்திற்குப் பிறகு குழந்தைகளின் வருகை ஏன் சரிபார்க்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்போதைக்கு, இந்த சம்பவம் கல்வித் துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
