துபாய் மெட்ரோவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு இந்தியர் தன் வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் இப்போது துபாய் இன்டர்னெட் சிட்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அட்மின் வேலை செய்கிறார். கேமரா பிடித்த இன்னொரு நபர் அவரிடம் வேலை, வாழ்க்கை பற்றி கேட்கிறார்.
கொரோனா லாக்டௌன் காலத்தில் இந்தியாவில் கட்டுமானப் பொருட்கள் சப்ளை தொழில் நடத்திய அவர், ரூ.2 கோடி நஷ்டம் அடைந்தார். வியாபாரத்தை மூடியதற்குக் காரணம் ‘கொரோனா இழப்பு’ என்றார். கடன் ரூ.2 கோடி இருந்தாலும், தப்பி ஓடாமல் எல்லாவற்றையும் முன்கூட்டியே அடைத்துவிட்டதாகப் பெருமையுடன் கூறினார். “பேங்க் உட்பட எல்லாம் பணம் கொடுத்தாச்சு” என்றார்.
இந்தத் தோல்வியிலும் அமைதியாகவும், புன்னகையுடனும் இருப்பது பலரை ஊக்குவிக்கிறது. “வாழ்க்கை தொடர்கிறது, நிகழ்ச்சி தொடர வேண்டும்” என்பது அவரது உந்து சக்தி. பெரிய கடனால் தவிப்போர் நாட்டைவிட்டு ஓடியபோது, இவரது நேர்மை அனைவரையும் கவர்கிறது.
आँखों में दर्द है, लेकिन चेहरे पर मुस्कान है.
ज़िंदगी का मतलब ही यही है…. Show Must Go On.
संघर्ष कीजिये.. लड़िये परिस्थितियों से….. सफलता आज नहीं तो कल.. कल नहीं तो परसो… आपके कदम चूमेगी. असफलताओं से और दुःख से मत घबराइए… यह जीवन का अभिन्न अंग हैं. pic.twitter.com/5TgH5c0gRn
— Cyber Huntss (@Cyber_Huntss) October 27, 2025
நெட்டிசன்கள் இவரது தைரியம், நேர்மை, பொறுப்புணர்வைப் பாராட்டுகின்றனர். “ சிலர் கோடிகளைத் திருப்பித் தராமல் ஓடியபோது, இவர் ரூ.2 கோடி கடனை அடைத்தது மாபெரும் உதாரணம்” என ஒருவர் கூறினார். இன்னொருவர், “பாதிக்கப்பட்டவராக அழுது புலம்பாமல், சிரித்து முன்னேறுகிறார்” என்றார். இவரது கதை உலகெங்கும் உத்வேகம் அளிக்கிறது.
