தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதால் பின்னர் அவர்கள் வெளியே வந்தனர். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் வழக்கை வாபஸ் பெறுவதாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்றம் அதனை ஏற்று அதனை தள்ளுபடி செய்தது.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அவரது கோரிக்கையை ஏற்று அதாவது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.