பூஜா மிஸ்ரா என்ற தில்லியைச் சேர்ந்த திருமணமான பெண், தன் கணவரின் மருமகனான அலோக் மிஸ்ராவுடன் (பூஜாவை விட 15 வயது சிறியவர்) தவறான உறவு வைத்திருந்தார். இது கணவருக்குத் தெரிந்ததும் அலோக்கை வீட்டைவிட்டு துரத்தினார். ஆனால் பூஜா தன் கணவரையும் இரண்டு சிறு குழந்தைகளையும் விட்டு, அலோக்குடன் பரேலியில் 7 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தார். பின்னர் இருவருக்கும் சண்டை வந்ததால் அலோக் தன் ஊரான சீதாபூருக்கு திரும்பினார். பூஜாவும் அங்கு சென்று அலோக்கைத் தேடினார்.
சீதாபூர் காவல் நிலையத்தில் இருவரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அங்கு அலோக் உறவைத் தொடர முடியாது என்று கூறியதும், பூஜா கோபத்துடன் தன் கையில் இருந்த பிளேடால் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், அவரது நிலைமை மோசமாக இருந்ததால் லக்னோவுக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
