ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவத்துக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய இராணுவம் மே 7ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தது.

அதன்பின், இரு நாடுகளின் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதையடுத்து, மே 10ஆம் தேதி இருதரப்பு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கைக்கு தீவிரமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை சந்தித்தபோது பேசிய அவர்,

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். நாம் பொதுமக்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, தேசத்தின் முதல் தூணாக மாற வேண்டும், என்று கூறினார்.

மேலும் “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் இறுதி நோக்கம் நிறைவேறும் வரை செயல்பாடு தொடரும். தற்போது, இந்திய இராணுவம் **‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’**க்கான முழுமையான தயாரிப்பில் உள்ளது,” என்று  தெரிவித்தார்.