பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழையால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க மின்வாரியம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மின்மாற்றிகள், கேபிள்கள் உள்ளிட்ட அவசியமான மின்சாதனங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்துள்ளோம் என மின்வாரியத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு இடத்திலும் மின் விநியோகத்தில் தடை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
