சென்னை ஆவடி அருகே தண்டுக்கரை பகுதியில் விவசாயி வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்ததில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் வீட்டிலிருந்த சுனில் பிரகாஷ் மற்றும் யாசின் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் ஒரே நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.