இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவிய ஒரு வீடியோ, ஒரு சிறுத்தை ஷாப்பிங் மாலில் ஓடி, மக்களை பயமுறுத்துவது போல் காட்டுகிறது. வீடியோவில், சிறுத்தை தரையில் வழுக்கி விழுந்து, குப்பைத் தொட்டிகளில் மோதி, எஸ்கலேட்டரில் சிக்கிக் கொள்கிறது. அப்போது, தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த மக்கள் பயந்து ஓடுகின்றனர். இந்த வேடிக்கையான காட்சி, புலி தீபாவளி பொருட்கள் வாங்க வந்தது போல் தோன்றி, பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ ‘aikalaakari’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு, 16 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்த வீடியோ உண்மையானது இல்லை. இது முழுக்க முழுக்க AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வேடிக்கை வீடியோ மட்டுமே. எந்த உண்மைச் சம்பவத்துடனும் இதற்கு தொடர்பு இல்லை. இந்த வீடியோ, AI-ஆல் உருவாக்கப்பட்டவை உண்மை போல தோன்றலாம். எனவே இதுபோன்றவற்றை நம்புவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
