இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு வீடியோ, முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பின்னர் மனதிற்கு நிம்மதி அளித்தது. வீடியோவில், ஒரு இளைஞன் வேண்டுமென்றே ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்கிறான். ரயில் வருவதை அறிந்தும், அவன் பயப்படாமல் ரயிலை நோக்கி கையை அசைத்து, மெதுவாக நடக்கிறான். ரயில் மிக அருகில் வரும்போது, அவன் தண்டவாளத்திலிருந்து ஒதுங்கி செல்கிறான். இதைப் பார்த்த ரயில் ஓட்டுநர், உடனே ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி வருகிறார்.

கோபமடைந்த ஓட்டுநர், அந்த இளைஞனை கடுமையாக திட்டி, அவனை தாக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், பலர் ஓட்டுநரின் செயலை ஆதரித்து, “இப்போது தான் நிம்மதியா இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர். இந்த சம்பவம், தண்டவாளத்தில் வேண்டுமென்று நடப்பதன் ஆபத்தை உணர்த்துகிறது. சமூக வலைதளங்களுக்காக உயிரை பணயம் வைப்பது எவ்வளவு தவறு என்பதை இந்த வீடியோ தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த வைரல் வீடியோ, உத்தரப் பிரதேசத்தின் பரேலி (Bareilly) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவமாகும். இது மே 2022-ல் நடந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் சமீபத்தில் மீண்டும் பரவியுள்ளது