பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய வசதிகள் களமிறக்கப்படவுள்ளன. ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு “லைவ் போட்டோஸ்” மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு “மோஷன் போட்டோஸ்” பகிரும் வசதி விரைவில் கிடைக்கவிருக்கிறது. இந்த அம்சம் மூலம் ஸ்டேட்டஸ் மற்றும் சாட்களில் அதிக பிரமிப்பை உருவாக்கும் வகையில் அசையும் புகைப்படங்களை பகிரலாம்.

மேலும், சாட் உரையாடல்களில் நேரடியாக மெசேஜ்களை மொழிபெயர்க்கும் “மெசேஜ் டிரான்ஸ்லேஷன்” வசதி, குழு சாட்களில் “திரெட்டட் ரிப்ப்ளைஸ்”, வீடியோ நோட்ஸ் அனுப்பும் வசதிகள் போன்றவை வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமாகவுள்ளன.

இதையடுத்து, பயனர்கள் அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் இந்த புதிய அம்சங்களை அனுபவிக்கலாம் என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.