ஆப்பிள் ஐபோனில் சமீபத்திய அப்டேட்டின் மூலம் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஐபோன் பயனர்கள் புதிய அம்சங்களை பரிசோதித்து, தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், தற்போது வைரலாகி வரும் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், ரீல்ஸ் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் பார்ப்பதற்காக விரல் தொடுதலை விட நாக்கை நீட்டினால் தானாகவே அடுத்த வீடியோக்கு ஸ்க்ரோல் ஆகும் என்ற சுவாரஸ்யமான அம்சம் காட்டப்பட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இந்த வசதியை செயல்படுத்துவதற்கான வழிமுறையும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது Settings → Accessibility → Voice Control → Commands → Custom Commands → Create New Command என்ற பாதையைத் தேர்ந்தெடுத்து, அங்கு “Action” பகுதியில் “Run Custom Gesture” எனும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, “Tongue Out” போன்ற முக அசைவைக் கமாண்டாக பதிவு செய்ய வேண்டும். இதனால், பயனர் நாக்கை நீட்டும் போது, திரை தானாக ஸ்க்ரோல் ஆகும். இது உண்மையில் ஆப்பிளின் தொழில்நுட்ப நுணுக்கத்தையும், முக அடையாள அடிப்படையிலான கட்டுப்பாட்டு திறனையும் வெளிப்படுத்துவதாக பலர் பாராட்டுகின்றனர். தற்போது இந்த வீடியோ ஐபோன் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இது வேறயா pic.twitter.com/gM7mp0ASwD
— நாடு எங்கபோகுது? (@Piramachari) October 5, 2025
