சமூக வலைதளங்களில் விரைவாக பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் பல இளைஞர்கள் ஆபத்தான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். “அபாயம் தான் புகழுக்கு வழி” என்ற தவறான எண்ணம் இப்போது இளைஞர்களிடையே பரவலாக காணப்படுகிறது. இதன் ஒரு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் மிகுந்த வேகத்தில் சென்று, எதிரே வரும் லாரி அல்லது வேனின் முன் ஹிந்தி திரைப்பட ஹீரோகளைப் போல் கிட்டத்தட்ட மோதும் அளவுக்கு சென்று திடீரென சருகி நின்று மீண்டும் தான் வந்த திசை நோக்கி வேகமாக வருகிறார். அந்த காட்சி மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி பரவியுள்ளதுடன், நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். “லைக்ஸ்” மற்றும் “பாலோவர்ஸ்” பெறுவதற்காக உயிரை ஆபத்துக்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் இது என பலர் எச்சரித்துள்ளனர். போலீசார் இத்தகைய ஆபத்தான ஸ்டண்ட் வீடியோக்கள் குறித்து கவனம் செலுத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதள பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
View this post on Instagram
